
துரந்தர் பார்ட் 2 ட்ரெய்லர் வெளியானது
இந்தியில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் ‘துரந்தர்’.
இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 1350 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது.
மூன்றரை மணி நேரம் நீளம் கொண்ட இந்த படம் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதற்றத்தை மையமாகக் கொண்டு, இந்திய உளவுத்துறை மேற்கொள்ளும் ரகசிய மிஷன் குறித்த விறுவிறுப்பான கதையாகும்.
இதையடுத்து ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ (Dhurandhar: The Revenge) திரைப்படம் எதிர்வரும் மார்ச் 19ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், துரந்தர்: தி ரிவெஞ்ச் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடா மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
Ab Pakistan ka mustakbil, Hindustan tey karega
— Jio Studios (@jiostudios) March 7, 2026
Trailer Out Now.
Book Now for Paid Previews on 18th March only.
????- https://t.co/9oK8N3bbsE#DhurandharTheRevenge releases worldwide on 19 March, on Gudi Padwa, Ugadi, and Eid.
Hindi | Telugu | Tamil | Kannada | Malayalam… pic.twitter.com/XbRyfy5uxr

