பருத்தித்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு

பருத்தித்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு

பருத்தித்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உதயகுமார் யுகதீஸ் போட்டியின்றி ஏகமனதாக தெரிவானார். 

பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் பருத்தித்துறை பிரதேச சபை, சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் இன்று (17) நடைபெற்றது. 

image

20 உறுப்பினர்களை கொண்ட பருத்தித்துறை பிரதேச சபைக்காக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 9 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன தலா 4 ஆசனங்களையும் சுயேட்சை குழு 2 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது. 

இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் முன்மொழியப்பட்ட உதயகுமார் யுகதீஸ் தவிசாளராகவும் பிரதி தவிசாளராக முன்மொழியப்பட்ட கனகரத்தினம் ஶ்ரீகாந்தருபனும் ஏகமனதாக தெரிவானார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )