கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மகள் பிணையில் விடுதலை

கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மகள் பிணையில் விடுதலை

லஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் மூவரையும் பிணையில் விடுவிக்க கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டமூவரும் லஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இன்று பிற்பகல் மூவரும் லஞ்ச ஒழிப்பு ஆணையத்தினால் கைது செய்யப்பட்டனர் .

இன்று பிற்பகல் குறித்த மூவரிடமும் லஞ்ச ஒழிப்பு ஆணையதிற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர், அவர்கள் கைது செய்யப்பட்ட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )