லிப்ட் விபத்தில் இளைஞன் ஒருவர் பலி

லிப்ட் விபத்தில் இளைஞன் ஒருவர் பலி

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் லிப்ட் விபத்தில் நேற்று (21) உயிரிழந்துள்ளார். 

டிலக்சன் (வயது 20) எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

விடுதியில் பணியில் இருந்த போது , மேல் தளத்திற்கு செல்வதற்காக லிப்டில் ஏறிய போது , லிப்டினுள் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்துள்ளார். அதனையடுத்து , சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )