இஸ்ரேலுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படவில்லை

இஸ்ரேலுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படவில்லை

ஈரானும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்தை ஈரான் மறுத்துள்ளது.

இது தொடர்பாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி தனது எக்ஸ் பதிவில், “இஸ்ரேல் தான் ஈரான் மீது போரை தொடங்கியது. நாங்கள் போரை தொடங்கவில்லை.

தற்போது வரை, போர் நிறுத்தம் அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த ‘உடன்பாடும்’ எட்டப்படவில்லை.

இருப்பினும், இஸ்ரேலிய ஆட்சி ஈரானிய மக்களுக்கு எதிரான சட்டவிரோத ஆக்கிரமிப்பை தெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் நிறுத்தினால், அதன் பிறகு எங்கள் பதிலடியைத் தொடர எங்களுக்கு எந்த நோக்கமும் இல்லை.

எங்கள் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )