ஈரானும் இஸ்ரேலும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன –  டிரம்ப்

ஈரானும் இஸ்ரேலும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன – டிரம்ப்

ஈரானும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் ,

“அனைவருக்கும் வாழ்த்துக்கள்! இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே முழுமையான போர் நிறுத்தம் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

சுமார் 6 மணி நேரத்தில், இஸ்ரேலும் ஈரானும் தங்கள் இறுதிப் பணிகளை முடித்த பிறகு 12 மணிநேர போர் நிறுத்தம் தொடங்கும்.

அப்போது போர் முடிந்ததாக கருதப்படும்.

அந்த 12 மணிநேர போர் நிறுத்தத்தின் பின், ஈரான், இஸ்ரேல் தங்கள் போர் நிறுத்த்தை நீட்டிக்கும், 24வது மணி நேரத்தில், 12வது நாள் போரின் அதிகாரப்பூர்வ முடிவை உலகமே வரவேற்கும்.

ஒவ்வொரு போர் நிறுத்தத்தின் போதும், மறுபக்கம் அமைதியாகவும் மரியாதையுடனும் இருக்கும். இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் முடிவுக்கு வருவதற்கான சகிப்புத்தன்மை, தைரியம் பெற்றதற்கு நான் வாழ்த்த விரும்புகிறேன்.

அதை “12 நாள் போர்” என்று அழைக்க வேண்டும்.

இது பல வருடங்களாக நீடித்து, முழு மத்திய கிழக்கையும் அழித்திருக்கக்கூடிய ஒரு போர், ஆனால் அது நடக்கவில்லை, மத்திய கிழக்கு ஒருபோதும் அழியாது!.

கடவுள் இஸ்ரேலை ஆசீர்வதிப்பாராக, கடவுள் ஈரானை ஆசீர்வதிப்பாராக, கடவுள் மத்திய கிழக்கை ஆசீர்வதிப்பாராக, கடவுள் அமெரிக்காவை ஆசீர்வதிப்பாராக, கடவுள் உலகை ஆசீர்வதிப்பாராக!” என்று பதிவிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )