???? Breaking News : இஸ்ரேல் உடனான போரை நிறுத்துவதாக ஈரான் அறிவிப்பு

???? Breaking News : இஸ்ரேல் உடனான போரை நிறுத்துவதாக ஈரான் அறிவிப்பு

ஈரானின் அணு ஆயுதங்கள் தங்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறும் எனக்கூறி இஸ்ரேல் கடந்த 13-ந் திகதி ஈரான் மீது தாக்குதல் தொடுத்தது.

ஈரானின் அணு திட்ட கட்டமைப்புகள் மற்றும் இராணுவ நிலைகளை குறிவைத்து போர் விமானங்கள் மூலம் குண்டு வீசி இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.

இதனையடுத்து, ஈரான் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்காவின் தலையீடு நிலைமையை மேலும் மோசமாக்கியது.

இந்நிலையில் ஈரானும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தார். 

இந்நிலையில் இஸ்ரேலுக்கு இடையிலான போரை ஈரான் நிறுத்தியுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )