
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு
ஜூன் மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 93,486 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தரவுகள் தெரிவிக்கின்றன.
அதனடிப்படையில், ஜூன் மாதத்திற்கான சமீபத்திய புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டதன் மூலம், 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,123,289 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில், 231,564 பேர் இந்தியாவிலிருந்தும், 111,940 பேர் ரஷ்யாவிலிருந்தும், 103,990 பேர் இங்கிலாந்திலிருந்தும் வந்துள்ளனர் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka

