பன் பட்டர் ஜாம் படத்தின் Stealer காட்சி வெளியீடு

பன் பட்டர் ஜாம் படத்தின் Stealer காட்சி வெளியீடு

இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் பிக்பாஸ் சீசன் புகழ் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர்.

மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இதை ரெயின் ஆஃப் ஆரோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

படத்தின் தியா தியா பாடலை சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

திரைப்படம் வரும் ஜூலை 18 ஆம் திகதி வெளியாகிறது.

படத்தின் ஸ்டீலர் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் மனக்ன் ராஜு-க்கும் அம்ம சரண்யா பொன்வன்ணனுக்கும் நடக்கும் உரையாடல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் ராஜு தன் முதல் நாள் கல்லூரி அனுபவத்தை மிகவும் நகைச்சுவையாக கூறும் காட்சி இடம் பெற்றுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )