முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிரான பிடியாணை மீளப் பெறப்பட்டது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிரான பிடியாணை மீளப் பெறப்பட்டது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெற கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது.

சஜின் வாஸ் குணவர்தன 3.69 மில்லியன் ரூபாய் வருமான வரி செலுத்துவதைத் தவிர்த்துள்ளதாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகத் தவறியதற்காக கடந்த 23ஆம் திகதி கைது செய்யப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

தனது சட்டத்தரணி மூலம் இன்று (26) கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனாவல முன் ஆஜரான சஜின் வாஸ் குணவர்தனவின் பிடியாணையை மீறப் பெற உத்தரவிட்ட நீதவான், 100,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான நான்கு பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார். 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )