
போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது
இந்தியாவில் இருந்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 21.3 மில்லியன் ரூபாய் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருட்களுடன் இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இந்தியாவை சேர்நத 38 வயதான சாரதி ஆவர்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

