கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்கை கடற்கரை கடலில் நீந்திக் கொண்டிருந்த இளைஞன்  பலி

கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்கை கடற்கரை கடலில் நீந்திக் கொண்டிருந்த இளைஞன் பலி

கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்கை கடற்கரை கடலில் நீந்திக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கம்பஹாவின் அஸ்கிரியவைச் சேர்ந்த 24 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஆவார்.

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் குழுவென்று நேற்று (26) காலை கடலில் ஸ்நோர்கெல் அணிந்து கடலின் அடிப்பகுதியைக் கவனித்துக்கொண்டிருந்தபோது, ​​மாணவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

கொழும்பு துறைமுக பொலிஸார், கடற்படை பிரிவு டைவர்ஸ் மற்றும் ரங்கல கடற்படை டைவர்ஸ் ஆகியோர் இணைந்து காணாமல் போன நபரைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது குறித்த இளைஞனை உயிரிழந்த நிலையில் மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )