டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கடந்த 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

2025 ஜனவரி மாதத்தின் இதே காலப்பகுதியில் சுமார் 4,970 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு அதே காலப்பகுதியில் 6,521 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் செயல் பணிப்பாளர் கபில கன்னங்கர தெரிவித்தார்.

டெங்கு நோயாளர்கள் அதிகளவில் பதிவாகிய மாவட்டமாக கொழும்பு மாவட்டம் காணப்படுவதாகவும், அங்கு 1,627 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கம்பஹா மாவட்டத்தில் 971 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )