போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டிய பெருமளவு சொத்துக்களுடன் சந்தேகநபர்கள் கைது

போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டிய பெருமளவு சொத்துக்களுடன் சந்தேகநபர்கள் கைது

போதைப்பொருள் கடத்தன் மூலம் சம்பாதித்ததாகக் கூறப்படும் பணத்தில் வாங்கப்பட்ட பெருமளவு சொத்துக்களுடன் சந்தேக நபர்கள் இருவரை சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்தனர்.

பணமோசடி சட்டத்தின் கீழ் 45 வயது பெண்ணொருவரும் 43 வயது ஆணொருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டனர் .
சந்தேக நபர்கள் பொரளை, கொழும்பு 08 இல் வசிப்பவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களால் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள்:
கந்தானையில் நான்கு மாடி வீடு
பொரளை, கொழும்பு 08 இல் இரண்டு இரண்டு மாடி வீடுகள்
பொரளை, கொழும்பு 08 இல் மூன்று மாடி வீடு
ஜப்பானிய ஆல்டோ (Alto )கார்
வேகன் ஆர் கார் ( Wagon R)

சந்தேக நபர்கள் நேற்றுமுன்தினம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் ஜூலை 11 ஆம் திகதிவரை வரை விளக்கமறியலில் வைக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது .

சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )