
185 பாடசாலைகளில் டெங்கு நுளம்பு அபாயம்
தேசிய டெங்கு விழிப்புணர்வு வாரத்தின் கீழ் நடத்தப்பட்ட ஆய்வுகளைத் தொடர்ந்து 185 பாடசாலைகள் டெங்கு நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவிக்கிறது.
தேசிய டெங்கு விழிப்புணர்வு வாரத்தின் கீழ் 298 பாடசாலைகள் ஆய்வு செய்யப்பட்டபோது அவற்றில் 185 பாடசாலைகளில் டெங்கு பரவும் அபாயம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சமூக வைத்திய நிபுணர் டாக்டர் பிரஷீலா சமரவீர தெரிவித்தார்.
தேசிய டெங்கு தடுப்பு வார திட்டத்தின் கீழ் மொத்தம் 3,886 டெங்கு நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவற்றில் 100 இடங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டாக்டர் சமரவீர மேலும் குறிப்பிட்டார்.
CATEGORIES Uncategorized

