கந்தானை, ஜா-எல, வத்தளை ராகம பகுதிகளில் 300 ற்கும் அதிகமானவர்கள் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை ராகம பகுதிகளில் 300 ற்கும் அதிகமானவர்கள் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் போதைப்பொருள் மற்றும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இப்பகுதிகளில் போலிஸ் ,பொலிஸ் விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் கடற்படை ஆகியவை இணைந்து நேற்றிரவு முழுவது சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர் .

இந்த அவசர சோதனை நடவடிக்கையின் போது இந்த பகுதிகளில் போக்குவரத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.பயணித்த வாகனங்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

நாட்டிலிருந்து போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒழிக்கும் செயல்முறையின் ஒரு படியாக இந்த விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது .

எதிர்காலத்தில் நாடு முழுவதும் விசேட சோதனைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகக் தெரிவித்த பொலிஸ் தேவையான ஆதரவை வழங்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சிடமும் பொதுமக்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )