உறவினரின் மரணச்சடங்கில் வாக்குவாதம்                                                          கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை

உறவினரின் மரணச்சடங்கில் வாக்குவாதம் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை

மஹியங்கனையின் குருமட பகுதியில் இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார் .

மஹியங்கனையைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலைசெய்யப்பட்டவரின் உறவினரின் இறுதிச் சடங்கின் போது ஏற்பட்ட குடும்ப தகராறின் விளைவாக இந்தக் கொலை இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலில் காயமடைந்த நபர் தற்போது மஹியங்கனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மஹியங்கனை போலீசார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )