
பாராளுமன்ற உறுப்பினராக யூ.டி. நிஷாந்த ஜயவீர பதவியேற்பு
தேசிய மக்கள் சக்தியின் யூ.டி. நிஷாந்த ஜயவீர இன்று (09) காலை பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.
கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவின் இராஜினாமாவைத் தொடர்ந்து வெற்றிடமான தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு யு.டி.நிஷாந்த ஜயவீரவின் பெயர் சமீபத்தில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

