கேரள தாதிக்கு 16ஆம் திகதி மரண தண்டனை நிறைவேற்றம்

கேரள தாதிக்கு 16ஆம் திகதி மரண தண்டனை நிறைவேற்றம்

இந்தியாவின் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த நிமிஷா பிரியா கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாட்டில் பல்வேறு மருத்துவமனைகளில் தாதியாக பணிபுரிந்தார்.

இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு இறுதியாக கிளினிக் தொடங்க முடிவு செய்தார். ஏமன் நாட்டின் விதிமுறைப்படி தொழில் தொடங்க வேண்டுமென்றால் அந்த நாட்டின் ஒருவர் பார்ட்னராக இருக்க வேண்டும். அதனடிப்படையில் தலால் அப்டோ மெஹ்தி என்பருடன் பார்ட்னராக சேர்த்துள்ளார்.

நாட்கள் செல்ல செல்ல மெஹ்தி, நிமிஷா பிரியாவை மிரட்ட தொடங்கியுள்ளார். இது தொடர்பாக புகார் அளிக்க மெஹ்தி கடந்த 2016ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் விடுதலை ஆகி வெளியே வந்த பின்னரும் தொடர்ந்து மிரட்டியுள்ளார்.

மெஹ்தி பறிமுதல் செய்து வைத்திருந்த பாஸ்போர்ட்டை மீட்க, நிமிஷா அவருக்கு மயக்க மருந்து செலுத்தியதாக தெரிகிறது. கூடுதல் டோஸ் செலுத்தியதால் மெஹ்தி உயிரிழந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பின்னர் நிமிஷா ஏமனில் இருந்து வெளியேற முயற்சித்தபோது, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 2018ஆம் ஆண்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. பின்னர் 2023ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது.

இந் நிலையில் வருகிற 16 ஆம் திகதி மரண தண்டனை நிறைவேற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )