
துஷார உப்புல்தெனியவுக்கு பிணை
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனியவுக்கு பிணை வழங்க நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதி பொது மன்னிப்பை பயன்படுத்தி அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவிப்பதற்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் துஷார உப்புல்தெனிய கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

