
நானுஓயாவில் 70 அடி பள்ளத்தில் வேன் விழுந்து விபத்து
நானுஓயாவில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குளானதில் எட்டு இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.
மாத்தறையிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் நானுஓயா சுற்றுவட்டாரத்தில் உள்ள டெஸ்போட் வட்ட பகுதியில் இன்று அதிகாலை 5:00 மணியளவில் விபத்துக்குளானது .
விபத்தில் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க அப்பகுதி மக்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஓட்டுனரின் நித்திரை கலக்கத்தால் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், வேன் பலத்த சேதமடைந்ததாகவும் நானுஓயா போலீசார் தெரிவித்தனர்.
CATEGORIES Sri Lanka

