பாணந்துறையில் உறங்கிக் கொண்டிருந்தவர் மீது இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு

பாணந்துறையில் உறங்கிக் கொண்டிருந்தவர் மீது இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு

பாணந்துறை, ஹிரன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாலமுல்ல பகுதியில் உள்ள வீட்டின் அறையில் உறங்கிக்கொண்டிருந்த நபர் ஒருவரை குறிவைத்து இன்று அதி காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டின் ஜன்னலை உடைத்து துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் மாலமுல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது .

இதன்போது பிஸ்தோல் வகை துப்பாக்கிச் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேக நபர்களைக் கைது செய்ய 3 பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குடு சலிந்துவிற்க்கும் நிலங்கவிற்கும் இடையிலான மோதலில் குடு சலிந்துவின் தரப்பைச் சேர்ந்த ஒருவரை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )