
சிலாபம் மீனவர்களுடன் மீன்பிடி படகு ஒன்று பலத்த காற்றில் சிக்கி காணாமல் போயுள்ளது
சிலாபத்திலிருந்து புறப்பட்ட மீன்பிடி படகு ஒன்று இரண்டு மீனவர்களுடன் காணாமல் போயுள்ளது .
கடல்பகுதியில் வீசிய பலத்த காற்றில் ஏற்பட்ட அனர்த்தத்தில் இந்த மீன்பிடி படகு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிலாபத்திலிருந்து மீனவர்களுடன் புறப்பட்ட மூன்று மீன்பிடி படகுகளில் ஒன்று காணாமல் போன நிலையில் ஏனைய இரண்டு மீன்பிடி படகுகளில் இருந்த மீனவர்கள் பாதுகாப்பாக நீந்திச் கரை சேர்ந்துள்ளனர்.
படகுடன் காணாமல் போன இரண்டு மீனவர்கள் சிலாபம், வெல்லா காலனியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய இரண்டு படகுகளில் ஒன்று பாறையில் மோதி சேதமடைந்த நிலையில் அதில் இருந்த மீனவர்கள் நேற்று இரவு நீந்திச் கரை சேர்ந்தனர். குறித்த மீனவர்களின் படகு கருகுபனே என்ற மீன்பிடி கிராமத்தின் தரைதட்டியது.
பலத்த காற்றில் சிக்கிய மற்றைய படகு கவிழ்ந்ததால், அதில் இருந்த மீனவர்கள் நீந்தி முத்துபந்திய மீன்பிடி கிராமத்தின் கரையை அடைந்தனர், பின்னர் அங்குள்ள மீனவர்களின் உதவியுடன் சிலாபம் பகுதியை அடைந்தனர்.
சிலாபம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற காணாமல் போன படகில் இருந்த இரண்டு மீனவர்கள் குறித்து எந்த தகவலும் இதுவரை கிடைக்காததால், விமானப்படை பெல் 12 ஹெலிகாப்டரைப் பயன்படுத்தி விமானப்படை தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றது.
இருப்பினும், காணாமல் போன படகு மற்றும் இரண்டு மீனவர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது .

