
நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 931 பேர் கைது
நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது, பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, நேற்று (17) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 677 கிராம் ஹெரோயின், 1 கிலோகிராம் 177 கிராம் ஐஸ், 63 கிலோகிராம் 495 கிராம் கஞ்சா, 23,097 கஞ்சா செடிகள், 273 கிராம் குஷ்ரக போதைப்பொருள், 49 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 1357 போதை மாத்திரைகள் மற்றும் 2 கிலோகிராம் 319 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
அதேநேரம், குறித்த போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 931 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

