
மியன்மார் சைபர் குற்ற முகாம்களில் மீண்டும் சிக்கியுள்ள இலங்கையர்கள் !
மியன்மாரில் சைபர் குற்ற நடவடிக்கைகளில் மேலும் 17 இலங்கையர்கள் வலுக்கட்டாயமாக பணியமர்த்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுற்றுலா விசாக்களில் பயணம் செய்த இலங்கை பிரஜைகளே சைபர் குற்ற நடவடிக்கைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
தாய்லாந்து – மியன்மார் எல்லைக்கு அருகில், அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள பகுதி கூகுள் வரைபடத்தில் சைபர் குற்றப் பகுதியாகப் பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மியன்மாரின் மியாவாடி பகுதியிலிருந்து சுமார் 25 கிலோமீற்றர் தொலைவில் உள்ள அந்த பகுதி தீவிரவாத குழு ஒன்றின் கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கணினித் துறையில் வேலை வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கு விரும்பும் சில இலங்கையர்கள் சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்குச் சென்று பின்னர் இதுபோன்ற கடத்தல்காரர்களிடம் சிக்கிக் கொள்வதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

