நாரஹேன்பிட்டியில் வீடொன்றில் தீ விபத்து ; ஒருவர் பலி

நாரஹேன்பிட்டியில் வீடொன்றில் தீ விபத்து ; ஒருவர் பலி

நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 397 ஆம் தோட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (23) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் சுமார் 50 வயதுடைய குத்தகைதாரர் எனவும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து நாரஹேன்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )