ரஷ்யாவில் விமான விபத்து  ; 49 பேர் பலி

ரஷ்யாவில் விமான விபத்து ; 49 பேர் பலி

49 பேருடன் சென்ற ரஷ்யாவின் அங்காரா விமான நிறுவனத்திற்கு சொந்தமான AN-24 பயணிகள் விமானம் அந் நாட்டின் கிழக்கு பகுதியில் விபத்துக்குள்ளானதில், யாரும் உயிர் பிழைக்கவில்லை என்று அந்நாட்டு உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சைபீரியாவை தளமாகக் கொண்ட அங்காரா விமான நிறுவனத்தால் இயக்கப்படும் An-24 விமானம், சீனாவின் எல்லையை ஒட்டியுள்ள அமுர் பிராந்தியத்தில் உள்ள டின்டா என்ற நகரத்தை நெருங்கும் போது ரேடார் திரைகளில் இருந்து தவறி விழுந்து விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு சிவில் பாதுகாப்பு, அவசரநிலைகள் மற்றும் பேரிடர் நிவாரண அமைச்சகம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )