ஈராக்கில் உள்ள அமெரிக்கர்களை உடனே வெளியேறுமாறு அறிவிப்பு

ஈராக்கில் உள்ள அமெரிக்கர்களை உடனே வெளியேறுமாறு அறிவிப்பு

ஈராக் முழுவதும் அமெரிக்க குடிமக்கள் மீது தாக்குதல் அபாயம் அதிகரித்துள்ளதாக ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் புதிய பாதுகாப்பு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அறிக்கையின்படி, ஈரான் ஆதரவு கொண்ட ஆயுதக் குழுக்கள், ஈராக் முழுவதும், குறிப்பாக ஈராக்கிய குர்திஸ்தான் பகுதிகளிலும் அமெரிக்கர்களையும், அமெரிக்காவுடன் தொடர்புடைய இலக்குகளையும் குறிவைத்து பரவலான தாக்குதல்கள் மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்க குடிமக்கள் உடனடியாக ஈராக் நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கும், எர்பில்லில் (Erbil) உள்ள துணைத் தூதரகத்திற்கும் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈராக் வான்வெளியில் ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் ராக்கெட் தாக்குதல்களின் அபாயம் தொடர்ந்தும் இருப்பதால், விமானப் பயணம் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், நாட்டை விட்டு வெளியேறும் அமெரிக்கர்கள் நிலப்பரப்பு வழியாக ஜோர்டான், குவைத், சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )