திலினி பிரியமாலி இரண்டு லட்ச ரூபாய் சரீர பிணையில் விடுதலை

திலினி பிரியமாலி இரண்டு லட்ச ரூபாய் சரீர பிணையில் விடுதலை

ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தொழிலதிபர் திலினி பிரியமாலியை, இரண்டு லட்ச ரூபாய் சரீர பிணையில் விடுவிக்க ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜூன் 16 ஆம் திகதி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கில் ஆஜராக சந்தேகநபர் திலினி பிரியமாலி ஹோமாகம நீதிமன்றத்திற்கு வந்தபோது, சம்மன் வழங்கியவரின் கடமைக்குத் இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்படல் , மிரட்டல் விடுத்தல் , குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த விடயம் தொடர்பில் திலினி பிரியமாலியை கைது செய்யுமாறு ஹோமாகம நீதவான் ராஜிந்திர ஜெயசுந்தர ஜூலை 14 ஆம் திகதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

சந்தேகநபர் ஜூலை 15 ஆம் திகதி ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்

இதனடிப்படையில் சந்தேகநபரான தொழிலதிபர் திலினி பிரியமாலி வாக்குமூலம் அளிக்க ஹோமாகம பொலிஸ் தலைமையகத்திற்கு வந்தபோது இன்று கைது செய்யப்பட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )