ஏமனில் கேரள தாதிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை  இரத்து ?

ஏமனில் கேரள தாதிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்து ?

கேரளா​வின் பாலக்​காட்டை சேர்ந்​த நிமிஷா பிரியா என்பவர் ஏமன் நாட்டை சேர்ந்த ஜவுளி வியா​பாரி தலால் அய்டோ மெஹ்​தி​யுடன் இணைந்து புதிய மருத்​து​வ​மனையை தொடங்​கி​னார்.

பின்னர் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை​யில் மெஹ்​திக்​கு,நிமிஷா மயக்க ஊசியை செலுத்​தி​ய போது அவர் உயிரிழந்துள்ளார்.இந்த வழக்கில் நிமிஷாவுக்கு கடந்த 16 ஆம் திகதி மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்ததது.

இந்த சூழலில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் காந்தபுரம் பகுதியை சேர்ந்த இஸ்லாமிய மதபோதகர் கிராண்ட் முப்தி அபூபக்கர் முசலியார் தலையீட்டை தொடர்ந்து நிமிஷா பிரியாவின் மரண தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஏமனில் கேரள தாதி நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிரந்தரமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மரண தண்டனை தற்காலிமகாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மரண தண்டனை முற்றிலும் இரத்து செய்யப்பட்டதாக கேரளாவை சேர்ந்த இஸ்லாமிய மதபோதகர் கிராண்ட் முப்தி அபூபக்கர் முசலியார் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, நிமிஷாவின் மரண தண்டனை இரத்து செய்யப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், தனிநபர்கள் கூறும் தகவல்களில் உண்மையில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )