தேசபந்துவை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்கும் சபாநாயகரின் கடிதத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்

தேசபந்துவை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்கும் சபாநாயகரின் கடிதத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்

பாராளுமன்ற தீர்மானத்திற்கமைய தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குமாறு சபாநாயகர் அனுப்பிய கடிதத்தை ஜனாதிபதி அங்கீகரித்துள்ளார்.

நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் ஆதரவு 177 வாக்குகளுடன் , எதிராக எந்த வாக்குகளும் இன்றி, தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .

பதவி நீக்கும் முன்மொழிவு கடந்த மார்ச் 25 ஆம் 115 எம்.பி.க்களின் கையொப்பங்களுடன் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மாஅதிபர் பதவியில் இருந்து நீக்கும் முன்மொழிவை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அங்கீகரித்துள்ளதாகவும்
ஜனாதிபதி கையொப்பமிட்ட கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குவதற்கான நடைமுறைகள் சட்டத்திற்கமைய பொலிஸ் மாஅதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )