பிரான்சில் அசுர வேகத்தில் பரவும் காட்டுத்தீ ஏற்படுத்தும் மோசமான விளைவுகள்

பிரான்சில் அசுர வேகத்தில் பரவும் காட்டுத்தீ ஏற்படுத்தும் மோசமான விளைவுகள்

பிரான்சின் தென்பகுதியின் Aude பிராந்தியத்தில் பரவிவரும் காட்டுத்தீயில் 15,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான நிலப்பரப்பை எரிந்துள்ளது .

தீயை அணைக்கும் பணியில் 2,150 தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ள நிலையில், ஒரு வயதான பெண் உயிரிழந்ததாகவும் ஒருவரைக் காணவில்லை எனவும் சுமார் 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு செயதிகள் கூறுகின்றன .

1949 க்குப் பிறகு பிரான்சில் ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத்தீ இது என்று அந்நாட்டின் அதிகாரிகள் கூறுகின்றனர்.

பல நீர் பாய்ச்சும் விமானங்கள் மற்றும் தீயணைப்பு குழுவினர் தீயணைப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் இன்னும் தீயை கட்டுக்குள் கொண்டுவரமுடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இது இன்னும் பல நாட்களுக்கு நீடிக்கும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் “மிகவும் எச்சரிக்கையாக” இருக்குமாறு மக்களைக் கேட்டுக்கொள்வதாக X பதிவிட்டுள்ளார்.

பிரான்ஸின் பாரிஸை விட பாரிய Aude பிராந்தியத்தில் காட்டுத்தீ பரவிய பகுதிக்கு விஜயம் செய்த பிரதமர் பரவிய தீ பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாகவும்,புவி வெப்பமடைதல் மற்றும் வறட்சியுடன் கூடிய காலநிலை இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )