
தெற்கு அதிவேக வீதியில் தீப்பிடித்த எரிந்த லொறி
தெற்கு அதிவேக வீதியில் கொட்டாவையிலிருந்து பயணித்த லொறியொன்று தடுப்பு வேலிகளில் மோதி விபத்துக்குள்ளானதோடு, லொறி தீப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருந்துகஹஹெத்கம பகுதியிலேயே இவ் விபத்து நடந்துள்ளது.
குறித்த விபத்தில் மூவர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

