மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு, கொக்குவில் – சவுக்கடி பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (11) மீட்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை வீட்டை விட்டு வெளியேறியவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அவரைத் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் இன்று(11) சவுக்கடி கடற்கரைப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் காணப்படுகின்றது என்று பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸாரும், தடயவியல் பிரிவு பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஏறாவூர் பகுதியிலுள்ள உறவினரது தங்க ஆபரண விற்பனை நிலையத்தில் பணியாற்றும் 34 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )