
சுங்கவரிக் குறைப்பு குறித்து ஜனாதிபதிக்கும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலக தூதுவருக்கும் இடையே ஒன்லைன் கலந்துரையாடல்
இலங்கை ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா விதித்துள்ள வரிகளைக் குறைப்பது தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலக USTR)
தூதுவர் ஜேமிசன் சிரியருக்கும் Jamieson Greer) இடையே அண்மையில் (25) பிற்பகல் மெய்நிகர் கலந்துரையாடல் நடைபெற்றது.
இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள சுங்க வரிகளைக் குறைப்பதும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவதும் இந்தக் கலந்துரையாடலின் பிரதான நோக்கமாகும்.
நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க மற்றும்
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலக(USTR )இன் அதிகாரிகளும் இந்த ஒன்லைன் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு

CATEGORIES Sri Lanka

