சிறைச்சாலை வைத்தியசாலையின் முன்னாள் பிரதி பணிப்பாளருக்கு விளக்கமறியல்

சிறைச்சாலை வைத்தியசாலையின் முன்னாள் பிரதி பணிப்பாளருக்கு விளக்கமறியல்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று (13) கைதுசெய்யப்பட்ட சிறைச்சாலை வைத்தியசாலையின் முன்னாள் பிரதி பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்க கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறைச்சாலை வைத்தியசாலைக்கு கைதி ஒருவரை மாற்றுவதற்காக இவ்வாறு இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2024 ஆம் ஆண்டில், கைதி ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்ற பின்னர், அவர் தொடர்ந்தும் அங்கு தங்கி சிகிச்சைப் பெறுவதற்காக இலஞ்சமாக, 15,00,000 ரூபா கோரப்பட்டதோடு, அதில் 3,00,000 ரூபா இலஞ்சமாகப் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )