நிறுவனப் பொறுப்பிலுள்ள சிறுவர்கள் மற்றும் வீதியோரச் சிறுவர்களுக்கு வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு வழங்க தீரமானம்

நிறுவனப் பொறுப்பிலுள்ள சிறுவர்கள் மற்றும் வீதியோரச் சிறுவர்களுக்கு வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு வழங்க தீரமானம்

நிறுவனப் பாதுகாப்பில் அல்லது பொறுப்பிலுள்ள சிறுவர்கள் மற்றும் வீதியோரச் சிறுவர்களுக்கான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம் நிறுவனப் பாதுகாப்பில் அல்லது பொறுப்பிலுள்ள சிறுவர்கள் மற்றும் வீதியோரச் சிறுவர்களுக்கு மாதாந்தம் 5,000/- ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2025.06.16 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ‘அர்த்தம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த வேலைத்திட்டத்தின் கொடுப்பனவுகள் 2025 யூலை மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

‘அர்த்தம்’ வேலைத்திட்டத்திற்கு 2025 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்டுள்ள 1,000 மில்லியன் ரூபாய்களை பிள்ளைகளின் உயரிய நலனுக்காகப் பயன்படுத்தக் கூடிய வகையில் 2025 ஜனவரி மாதம் தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் குறித்த கொடுப்பனவுகளை வழங்குவதற்கு இயலுமை இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, ‘அர்த்தம்’ வேலைத்திட்டத்தின் கொடுப்பனவுகளுக்கான உரித்து ஆரம்பிக்கின்ற திகதி 2025.01.01 எனக் கருத்தில் கொள்வதற்கும், அன்று தொடக்கம் உரித்தான நிலுவையைச் பயன்பெறும் பிள்ளைகளின் கணக்கில் வைப்பிலிடுவதற்கும், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )