வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

மேல், சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுடன், காலி, மாத்தறை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் இன்று (02) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பலத்த மின்னலுடன் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் வெளியிடப்பட்ட வானிலை அறிவிப்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மின்னலுடன் கூடிய மழை நேரங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )