
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜை கைது
சுமார் 72 இலட்சம் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற சீனப் பிரஜை ஒருவர் இன்று (02) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் சீனாவைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கொண்டு வந்த நான்கு பயணப்பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 240 கார்ட்டூன் சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன. அவற்றில் சீனாவில் தயாரிக்கப்பட்ட ஏழு வகைகளில் சேர்ந்த சுமார் 48,000 சிகரெட்டுகள் இருந்ததாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

