சிறிய சொக்லேட் திருடியமைக்காக 67 வயது முதியவர் அடித்துக் கொலைகண்டியில் சம்பவம்

சிறிய சொக்லேட் திருடியமைக்காக 67 வயது முதியவர் அடித்துக் கொலைகண்டியில் சம்பவம்

சிறிய சொக்லேட் பாக்கெட் ஒன்றை திருடியமைக்காக 67 வயதுடைய முதியவர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கண்டி, பேராதனையில் இடம்பெற்றுள்ளது.

இந்த கொலையை செய்த கடையின் உரிமையாளரும் அவரது ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேராதனையில் ஈரியகம பகுதியைச் சேர்ந்த இந்த முதியவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை.

இவர் திருமணமாகி தனது பிள்ளைகள் வேறு பகுதிகளில் குடியேறிய பின்னர் அவர் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று உணவுப் பொருட்கள் வாங்குவதற்கு கடைக்குச் சென்ற போது அங்கு இரண்டு பேர் அவரை கடைக்குள் இழுத்துச் சென்று தாக்கியுள்ளதாகவும் அதற்கு முதல் நாள் ,குறித்த முதியவர் அந்த கடையில் சொக்லேட்டுகளை திருடும் காட்சி சிசிரிவி கமராவில் பதிவாகியிருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொக்லேட் வாங்கும் அளவிற்கு பணம் இல்லாமையால் சொக்கோலேட் பிரியரான முதியவர் சொக்கோலேட் களவாடியதாகவும்
வழமையாக குறித்த கடையில் அவருக்கும் அவரது மனைவிக்கும் பணம் கொடுத்து சொக்கோலேட்கள் வாங்கும் பழக்கம் இருந்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் தாக்குதலுக்குள்ளான முதியவரை கடை மூடும் நேரம் வரை உள்ளே வைத்திருந்து பின்னர் வீதியில் விட்டுச் சென்றுள்ளதாகவும் அவ் வழியூடாக சென்ற பெண்ணொருவர் முதியவரை அடையாளம் கண்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் மரணப்படுக்கையில் இருந்த முதியவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேராதனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விஜித விஜேகோனின் அறிவுறுத்தலின் பேரில், குற்றப்பிரிவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சஞ்சீவ மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )