இலங்கை மீனவர்கள் இருவர் இந்தியாவில் கைது

இலங்கை மீனவர்கள் இருவர் இந்தியாவில் கைது

யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் படகில் இந்திய எல்லைக்குள் நுழைந்தபோது அவர்களது படகு பழுதடைந்துள்ளது. 

இதன் காரணமாக இந்தியா, ஆறுகாட்டுத்துறை கடற்கரையை சென்றடைந்த நிலையில் அவர்கள் இருவரையும் தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இளைஞர்கள் சென்ற படகு பழுதடைந்தமையால் அவர்களை ஆறுகாட்டுத்துறை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர். 

குறித்த இளைஞர்கள் இருவரையும் கைது செய்த வேதாரண்யம் கடலோர பொலிஸ் குழுவினர், அவர்கள் மீன்பிடிக்க வந்தவர்களா? அல்லது கடத்தல் நோக்கத்துடன் வந்தவர்களா என விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )