மாலை 6 மணி முதல் பஸ் வேலைநிறுத்தம்?

மாலை 6 மணி முதல் பஸ் வேலைநிறுத்தம்?

இன்று (22) மாலை 5.00 மணிக்குள் முறையான பேருந்து கட்டணத் திருத்தம் அறிவிக்கப்படாவிட்டால், மாலை 6.00 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

கட்டண திருத்தம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சென்றபோதிலும், இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து செயல்பாட்டு செலவுகள் அதிகரித்துள்ளதால், கட்டண திருத்தம் அவசியம் எனவும் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில், தீர்வு கிடைக்காவிட்டால் மாலை முதல் பொதுப் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )