ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் ; ஈரான் அறிவிப்பு

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் ; ஈரான் அறிவிப்பு

ஈரான் பாராளுமன்ற உறுப்பினர் அலாதீன் போரூஜெர்டி, ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சில கப்பல்களிடமிருந்து 2 மில்லியன் அமெரிக்க டாலர் கட்டணம் வசூலிக்கப்படுமென தெரிவித்துள்ளார்.

ஈரானிய அரசு தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில், ஹோர்முஸ் ஜலசந்திக்காக “புதிய ஆட்சி முறை” ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“போருக்கு ஒரு விலை உண்டு” என்பதை வலியுறுத்திய அவர், இந்த நடவடிக்கை மூலம் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் சக்தி மற்றும் அதிகாரம் உலகிற்கு வெளிப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

தற்போதைய இராணுவ பதற்ற நிலையை முன்னிட்டு, ஈரானியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களை கடுமையாகச் சோதனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இஸ்ரேல் அல்லது அமெரிக்காவுடன் தொடர்பில்லையென உறுதிப்படுத்தப்பட்ட கப்பல்களையே பாதுகாப்பாக கடத்த அனுமதிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )