இலங்கையர் தினத்தை ஒக்டோபர் 23 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது

இலங்கையர் தினத்தை ஒக்டோபர் 23 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது

இலங்கையர் தினத்தை எதிர்வரும் ஒக்டோபர் 23 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது எனவும் மாகாணசபைத் தேர்தல் 2026 ஆரம்பத்தில் இடம்பெறும் எனவும் சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் ” தேசிய சமத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்கான பயணத்தில் புதியதொரு ஆரம்பமாக இலங்கையர் தின நிகழ்வு அமையும் என உறுதியாக நம்புகின்றோம்.

தேசிய சமத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்குரிய பாரிய பொறுப்பு எமது அரசுக்கு உள்ளது. அதனை நோக்கி பயணிப்போம். ஒக்டோபர் 23 ஆம் திகதி ஆரம்பமாகும் நடவடிக்கை தொடரும். இவ்வாறு நல்லிணக்கம் நோக்கி விரிவான பயணம் தொடரும்.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )