இந்திய மக்களுக்காக சமூக ஊடகத்தை உருவாக்க வேண்டும்

இந்திய மக்களுக்காக சமூக ஊடகத்தை உருவாக்க வேண்டும்

இந்தியாவின் 79-வது சுதந்திர தினம் இன்று (15) கொண்டாடப்படுகிறது.

சுதந்திர தினத்தையொட்டி 21 குண்டுகள் முழங்க புதுடெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி வைத்தார்.

செங்கோட்டையில் 12-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி,

“இந்திய மக்கள் ஏன் வெளிநாடுகளின் சமூக ஊடகங்களை நம்பியிருக்க வேண்டும்? இந்தியர்களின் பணம் ஏன் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும். இந்திய இளைஞர்கள் சொந்தமாக இந்திய மக்களுக்காக சமூக ஊடகத்தை உருவாக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )