மினுவாங்கொடயில் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களுடன் சந்தேக நபர் கைது

மினுவாங்கொடயில் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களுடன் சந்தேக நபர் கைது

சட்டவிரோதமாக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில்
மினுவாங்கொடயில் நபர் ஒருவர் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்திம ஜெயரத்ன எனும் 45 வயது நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபரின் வீட்டில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போது T-56 ரக துப்பாக்கி, ஒரு கைத் துப்பாக்கி, T-56 தோட்டாக்கள், கைத் துப்பாக்கி தோட்டாக்கள், மூன்று வாள்கள் மற்றும் இரண்டு கத்திகளும் மீட்கப்பட்டுள்ளது,

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் இலங்கை சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் என்றும் தற்போது பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )