
வாழைச்சேனையில் வீடொன்றில் தீ பரவல்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி 3 ஆம் வட்டாரம் எம்.கே. வீதியிலுள்ள வீடொன்று நேற்று (17) தீப்பற்றி எரிந்துள்ளது.
தீப்பற்றிய வீட்டுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களும் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன.
ஓட்டமாவடி பிரதேச சபை ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இணைந்து வீட்டில் பரவிய தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
குடும்பத் தகராறு காரணமாக இந்த தீ வைப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இந்நிலையில் குறித்த வீட்டின் உரிமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

