வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (19) அதிகாலை 5.94 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் கடத்த முயன்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் திருகோணமலையைச் சேர்ந்த 33, 45 வயதான தொழிலதிபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டபோது அவர்களிடம் 39,600 சிகரெட்டுகள் அடங்கிய 198 அட்டைப் பெட்டிகள் இருந்துள்ளன. சந்தேக நபர்களும் கடத்தப்பட்ட சிகரெட்டுகளும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )