பண்டாரகமவில் துப்பாக்கிச் சூடுஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு

பண்டாரகமவில் துப்பாக்கிச் சூடுஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு

பண்டாரகம, பொல்கொட பாலத்திற்கு அருகிலுள்ள துனோதிய பகுதிக்கு அருகில் இன்று மாலை 6.00 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அப்பகுதியில் காரில் இருந்த ஒருவர் மீது அடையாளம் தெரியாதவர்களால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சூட்டுக்கு T -56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்ட்டதாகவும், குறித்த நபர் மீது 20க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )