142,027 பேர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் இந்த வருடம் கைது

142,027 பேர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் இந்த வருடம் கைது

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் 142,027 பேர் கைது செய்யப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 25 வரையிலான காலப்பகுதியில் ஹெராயினுனுடன் 43,564 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 51,950 பேரும், கஞ்சாவுடன் 46,513 பேரும் கைது செய்யப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்போது 941 கிலோகிராம் ஹெராயின், 1413 கிலோகிராம் ஐஸ் மற்றும் 12558 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.

போலீசார் , விசேட அதிரடிப்படை மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது இந்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )